உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜி சந்திரசேகரை பாராட்டிய பாலா

விஜி சந்திரசேகரை பாராட்டிய பாலா


ஏ எல் விஜய் இயக்கம் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார் நடிகை விஜி சந்திரசேகர். அந்தப் பட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த இயக்குனர் பாலா, விஜி சந்திரசேகரை வெகுவாக பாராட்டியுள்ளார். ''எனக்கு ராதிகாவை ரொம்ப பிடிக்கும் அதே சமயத்தில் 'மதயானை கூட்டம்' படத்தில் விஜி சந்திரசேகரின் நடிப்பு அபாரமாக இருக்கும். ஒரு காட்சியில் அவருடைய கண்கள் சிறப்பாக நடித்திருக்கும்'' என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத விஜி, பாலாவை உடனே சந்தித்து நன்றி தெரிவித்தார். பெரும்பாலும் பட விழாக்கள் ,பூஜைகள் சிறப்பு காட்சிகளுக்கு வராதவர் பாலா. சமீப காலமாக இந்த முடிவில் மாற்றம் தெரிகிறது. சசிகுமாரின் 'மை லார்ட்' படவிழாவுக்கு வந்து படக்குழுவை வாழ்த்தினார் பாலா. அவரிடம் சசிகுமார் உதவியாளராக பணியாற்றியதாலும் ராஜூமுருகன் அவருக்கு நண்பர் என்பதாலும் விழாவுக்கு வந்ததாக தகவல். இயக்குனர் விஜயும், பாலாவும் நல்ல நண்பர்கள் என்பதால் அவர் இயக்கிய இந்த படத்துக்கு வந்து வாழ்த்தியதாக தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !