பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண்
ADDED : 1 days ago
உப்பன்னா பட இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் 'பெத்தி'. இதில் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, ஷோபனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
கிராமத்து கதைக்களத்தில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இதன் அநேக படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் தான் படமாக்க வேண்டி இருக்கிறது. ஏப்., 30ல் படம் திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக படத்தின் மற்ற பணிகளும் மறுபுறம் துவங்கி உள்ளது. இந்நிலையில் ராம் சரண் தனது காட்சிகள் சம்மந்தப்பட்ட டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இதை படக்குழு அறிவித்துள்ளது.