உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்'

விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்'


விதார்த் நடிக்கும் புதிய படத்திற்கு 'தொடக்கம்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் அவருடன் சாந்தினி தமிழரசன், எஸ்தர் அணில், ஸ்ரேயா ருக்மணி, கோபராஜு ரமணா, அக்ஷதா மற்றும் கேஷவ் ஆகியோர் நடிக்கிறார்கள். துளசி ராமன் இயக்குகிறார். பரத் ஷங்கர் இசை அமைக்கிறார், ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இந்தப்படம், மனித வாழ்க்கையை வடிவமைக்கும் உறவுகள், உணர்வுகள் மற்றும் நுண்ணிய பாசப்பிணைப்புகளை ஆழமாக ஆராய்கிறது. நிஜ வாழ்வை ஒட்டிய கதைக்களமும் வலுவான உணர்ச்சி ஆழமும் கொண்ட இப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகிறது.

படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெறவுள்ளது. கதையின் உணர்ச்சி நயத்தை பிரதிபலிக்கும் இயற்கைச் சூழலைப்பதிவு செய்யும் வகையில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அர்த்தமுள்ள மற்றும் மனதில் நிற்கும் குடும்பக் கதையாக தயாராகிறது”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !