உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு

கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு


'அசுரன், விடுதலை 2, வாத்தி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கென் கருணாஸ். நடிகர் கருணாஸின் மகன். தற்போது 'யூத்' என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ரீதேவி, அனிஷ்மா அனில்குமார், சுராஜ் வெஞ்சார மூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

பள்ளிப் பருவக் காலத்தில் நடக்கும் காதல் சேட்டைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், பாடல்கள் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'யூத்' படத்தின் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டார். பள்ளி மாணவனான கென் 3 பெண்களைக் காதலிக்கும் கதையான இது நகைச்சுவையுடன் கூடிய உணர்வுப்பூர்வமான படமாக உருவாகியுள்ளது. படம் மார்ச் 19ம் தேதி ரிலீசாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !