உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு

பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு


'அம்மணி, மாவீரன், தண்டட்டி, அயலான்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் செம்மலர் அன்னம். சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் முதன்முறையாக 'மயிலா' என்ற படத்தை இயக்கி உள்ளார். சுயமரியாதை, நிலைத்தன்மை, வாழ்க்கை போராட்டத்தில் வேலைக்கு போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கை பயணத்தை அவளது சிறிய மகளின் பார்வையில் இருந்து கூறும் கதையாக உருவாகியுள்ளது.

இப்படம் 55வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிரைட் ப்யூச்சர் பிரிவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டை பெற்றது. மேலும், ஆசிய திரைப்படங்களையும் படைப்பாளர்களையும் கவுரவிக்கும் நெட்பாக் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்தின் டீசர், மகளிர் தினமான இன்று (மார்ச் 8) வெளியிடப்பட்டது.

இது பற்றி செம்மலர் அன்னம் கூறியதாவது: நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் வாழ்க்கையை கவனித்துப் பார்த்ததில் இருந்து அவர்களின் உணர்வுகளால் உருவானது 'மயிலா'. பல பெண்கள் பெரும் பொறுப்புகளை சுமந்தாலும் அதற்கான அங்கீகாரம் அரிதாகவே கிடைக்கிறது. அவர்களின் பொறுமையும், மரியாதையும், உறுதியும் இந்தக் கதைக்கு மிகுந்த ஊக்கமாக இருந்தது. மகளிர் தினத்தில் டீசரை வெளியிடுவது மிகவும் அர்த்தமுள்ளதாக உணர்கிறேன், ஏனெனில் இந்தப்படம் அதற்கான முகாந்திரங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !