உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு'

உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு'


'உறியடி' படத்தின் மூலம் இயக்குனர், நடிகர் ஆக அறிமுகமானார் விஜய்குமார். இதையடுத்து அவர் 'உறியடி 2, பைட் கிளப், எலக்ஷன்' உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இந்த நிலையில், இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'அறிவு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் பெண் உரிமைகளை மையமாக கொண்ட வலுவான சமூக கருத்துடன் உருவாகியுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். இடுக்கி, தேனி, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !