15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்'
ADDED : 120 days ago
கடந்த 2011ம் ஆண்டில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஜாக்கி செராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் ' ஆரண்ய காண்டம்'. இந்த படம் கமர்ஷியல் ஆக வெற்றி பெறாமல் இருந்தாலும் இந்த படத்திற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் கலாசாரம் அதிகம் ஆகியுள்ளது. இந்த நிலையில் ஆரண்ய காண்டம் படத்தை வருகின்ற மார்ச் 13ம் தேதியன்று தின்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.