உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரதிராஜா பெயரில் விருது, பாக்யராஜ் பெயரில் தெரு: கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா தமிழக அரசு?

பாரதிராஜா பெயரில் விருது, பாக்யராஜ் பெயரில் தெரு: கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா தமிழக அரசு?


சமீபத்தில் மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ்க்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை செய்யப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழங்க அவர்களின் இறுதி சடங்குகள் நடந்தன.

இந்நிலையில், பாக்யராஜ், பாரதிராஜா பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இயக்குனர் கே.பாக்யராஜ் பெயரில் சிறந்த திரைக்கதாசிரியர், கதாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும். பாரதிராஜா பெயரில் சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட வேண்டும் என்று இயக்குனர் சங்க பொருளாளர் பேரரசு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக அரசு சினிமா விருதுகளை வழங்கி வருகிறது. அதிலேயே இந்த பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் பாக்யராஜ் வீடு உள்ளது. அந்த தெருவுக்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் என்று கூல் சுரேஷ் பேசியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் சார்பில் முறைப்படி அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. இந்நிலையில், மறைந்த இந்த இரண்டு இயக்குனர்களின் படத்திறப்பு விழா, இரங்கல் கூட்டத்தை பெரியளவில் நடத்த வேண்டும் என்றும் பலர் விரும்புகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை இயக்குனர் சங்கம் செய்ய வேண்டும் என்றும் குரல்கள் கேட்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !