உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தமிழில் படமான உலக சினிமா

பிளாஷ்பேக்: தமிழில் படமான உலக சினிமா


ஒரு மனிதன் மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தியை பெற்றால் என்ன நடக்கும் என்கிற கற்பனையை வைத்து உருவானதுதான் 'இன்விசிபிள் மேன்' கதைகள். ஹாலிவுட்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட படங்கள் இதே பாணியில் வந்திருக்கிறது. 1933ம் ஆண்டு முதல் படம் வெளியானது. 2020ம் ஆண்டு கடைசி படம் வெளியானது. இதே பாணியில் இன்னும் படங்கள் வரலாம்.

உலக புகழ்பெற்ற இந்த பார்முலாவில் வந்த தமிழ் படம் 'மாயமனிதன்'. 1958ம் ஆண்டு வெளியான இந்த படத்தை டி.பி.சுந்தரம் என்பவர் (மார்டன் தியேட்டர் சுந்தரம் அல்ல) தயாரித்து, இயக்கினார். ஸ்ரீராம், சந்திரகாந்தா, அசோகன், மாஸ்டர் விஜயகுமார், வனராஜா, மைதிலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோவிந்தராஜூலு நாயுடு இசை அமைத்திருந்தார். சிக்கலான கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு எம்.கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தன் குடும்பத்தை இழந்த ஒரு சாதாரண மில் தொழிலாளி இளைஞன் தவறான மருந்து ஒன்றை குடித்து மற்றவர்கள் கண்ணிலிருந்து மறையும் சக்தியை பெறுகிறார். தன் குடும்பத்தை இழக்க காரணமானவர்களை கண்டுபிடித்து அவன் சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் படத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !