உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 3 மணி நேரத்திற்கு மேல் ‛கர' : குறைக்க சொன்ன தயாரிப்பாளர்

3 மணி நேரத்திற்கு மேல் ‛கர' : குறைக்க சொன்ன தயாரிப்பாளர்

போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் 'கர' எனும் படத்தில் நடித்துள்ளார் . வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் மமிதா பைஜூ , கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ் , ஜெயராம், சுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 30ந் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் முதல் காப்பியை இயக்குனர் தயார் செய்து தயாரிப்பாளரிடம் காட்டியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது என்றாலும் 3 மணி நேரம் நீளம் கொண்ட படமாக இருப்பதை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் விக்னேஷ் ராஜாவிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு விக்னேஷ் ராஜா சம்மதம் தெரிவித்து இரண்டரை மணி நேர கொண்ட படமாக தயார் செய்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !