வாசகர்கள் கருத்துகள் (1)
ஜனநாயகனனுக்கு இது பெருந்தது இந்த படம் பார்க்க அடிக்கடி வருபவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்
உலக அளவில் அதிக அளவில் திரைப்படங்கள் வெளியிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒரு படத்திற்குத் தணிக்கை பெற்ற பின்னரே இந்தியாவில் திரைப்படங்களைத் திரையிட முடியும். சினிமாட்டோகிராபி சட்டம் 1952 மற்றும் சினிமாட்டோகிராப் (சான்றிதழ்) விதிகள் 2024ம் ஆண்டின் படி மத்திய தணிக்கை வாரியம் திரைப்படங்களைத் தணிக்கை செய்கிறது.
தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் தணிக்கை வாரியம் குறித்த பத்திரிகைச் செய்தி ஒன்றை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி 2024 - 25 ம் ஆண்டில் மொத்தம் 15,444 படங்களுக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 3033 படங்களுக்கு 'கட் மற்றும் மாற்றங்களை' பரிந்துரைத்து பின்னர் சான்றிதழ் வழங்கியும், 2 படங்களுக்கு சான்றிதழ் தர மறுத்தும் உள்ளார்கள்.
2020 முதல் 2025 வரையில் மொத்தம் 71,693 படங்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 41,817 படங்களுக்கு 'யு' சான்றிதழ், 28,268 படங்களுக்கு 'யுஏ' சான்றிதழ், 1,878 படங்களுக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
2025ம் ஆண்டில் உயர்நீதிமன்ற வழக்குகளின் மூலம் 10 படங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சினிமாட்டோகிராபி (சான்றிதழ்) 2024 விதிகளில் 37வது விதியின்படி ஒரு படத்திற்கான சான்றிதழ் வழங்கும் காலத்திற்கான வரம்பு 48 வேலை நாட்கள். ஆன்லைன் சான்றிதழ் செயல்படுத்தப்படுவதன் மூலம் முழு நீளத் திரைப்படங்களுக்கு தற்போது 22 வேலை நாட்களிலும், குறும்படங்களுக்கு 3 வேலை நாட்களிலும் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்லிமெண்டில் மல்லிகார்ஜுன கார்கே கேட்ட கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் துணை அமைச்சர் எல் முருகன் மேற்கண்ட பதிலை அளித்துள்ளார் என பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயகனனுக்கு இது பெருந்தது இந்த படம் பார்க்க அடிக்கடி வருபவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்