உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய்

கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் டெக்ஸ்லா என்ற படத்தின் பூஜை கடந்த வாரம் நடந்தது. அப்பா மகன் சம்பந்தப்பட்ட கதை அது என்று கூறப்படுகிறது. அப்பாவாக மலையாள நடிகர் சூராஜ் வெஞ்சரமூடும், மகனாக ஜெய்யும் நடிக்கிறார்கள். கண்ணன் ரவி குழுமம் தயாரிக்கிறது.

இந்நிலையில் எஸ்எஸ்டி நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார். சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்னையை மையமாக வைத்து, ஆக்ஷன் த்ரில்லராக இந்த படம் உருவாக உள்ளது.

சென்னை மற்றும் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த படங்கள் தவிர கருப்பர் நகரம், பிரேக்கிங் நியூஸ் ஆகிய படங்களும் ஜெய் வசம் உள்ளன. சில ஆண்டுகளாக ஒரு வெற்றி படத்துக்காக ஜெய் ஏங்கி வருகிறார். அவர் ஹிட் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !