உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2'

முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2'

ஆதித்யா தர் இயக்த்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் இந்த வாரம் மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முன்பதிவு கடந்த வாரம் முதல் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி இப்படத்தின் முன்பதிவு 120 கோடி வசூலைக் கடந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 60 கோடி, வெளிநாடுகளில் சுமார் 60 கோடி என இதுவரையில் முன்பதிவு ஆகியுள்ளதாம். மேலும் சில புதிய சாதனைகளை இந்த முன்பதிவில் படைத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்தியாவில் பிரிமியர் காட்சிகளில் அதிக வசூல், முதல் நாள் முன்பதிவில் அதிக வசூல், அமெரிக்க ஓபனிங்கில் அதிக வசூல், 24 மணி நேரத்தில் மிக விரைவில் 1 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு என புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் முன்பதிவு இன்னும் கூடுதலாக நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !