உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவின் 'அரசன்' 2ம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

சிம்புவின் 'அரசன்' 2ம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்


வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அரசன்'. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் என்பதுடன் இவர்கள் கூட்டணியில் இணைந்திருக்கும் அனிருத்துக்கும் இதுதான் இவர்களுடன் முதல் படம். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதியும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் வெற்றிமாறன் பேசும்போது, அரசன் படத்தின் கதை 2003ல் அதாவது தனது முதல் படமான 'பொல்லாதவன்' படத்தை இயக்குவதற்கு முன்பே தான் எழுதியதாக கூறியுள்ளார். அது மட்டுமல்ல அரசன் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே மொத்த ஸ்கிரிப்ட்டையும் முடித்துவிட்டு படப்பிடிப்பை துவங்கியுள்ளதாக கூறியுள்ளார் வெற்றிமாறன். நேற்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. சிம்புவின் ஒத்துழைப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !