உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட 276 நாட்கள் காத்திருந்த மலையாள நடிகர்

சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட 276 நாட்கள் காத்திருந்த மலையாள நடிகர்


சூர்யா முதன்முறையாக தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி டைரக்ஷனில் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரும், பின்னர் சூர்யா, மமிதா பைஜூ இடம்பெற்ற டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் வளர்ந்து வரும் மலையாள இளம் நடிகரான ஆண்டனி வர்கீஸ் சூர்யாவுடன் படப்பிடிப்பு தளத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “மீண்டும் ஒரு ரசிகனின் தருணம் இது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்வதற்காக 276 நாட்கள் காத்திருந்தேன். விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா சார் ஆக்சன் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை சந்தித்தேன். அவருடன் சில வார்த்தைகள் பேசவும், புகைப்படம் எடுக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இதைவிட அதிகம் என்ன அன்பை கேட்க முடியும்? சூர்யா, வெங்கி அட்லூரியின் பிளாக்பஸ்டர் பயணம் தொடரட்டும்” என்று கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த பதிவில் இருந்து விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டதாக தெரிகிறது. அதே சமயம் இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ் ஏதேனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரா என்பது பற்றி குறிப்பிடாமல் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார். வரும் நாட்களில் அந்த சஸ்பென்ஸ் உடையலாம் என தெரிகிறது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !