இரண்டு இண்டக்ஷன் ஸ்டவ்கள் ஆர்டர் செய்துள்ளோம் : அக்ஷய் குமார்
ADDED : 3 minutes ago
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போரினால் இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்பது கேஸ் தட்டுப்பாடு தான். இது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறிப்பாக வீடுகள் மற்றும் ஹோட்டல், டீ கடை போன்ற வணிக தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஒரு பேட்டியில் அக்ஷய் குமாரிடம் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதன்படி,இதுவரை எங்கள் வீட்டில் எந்த பிரச்னையும் இல்லை. என் மனைவி இரண்டு இண்டக்ஷன் ஸ்டவ்கள் ஆர்டர் செய்துள்ளார். அவை வீட்டுக்கு வந்து விட்டதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.