உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம்சரணிடம் கிரிக்கெட் பேட்டில் ஆட்டோகிராப் வாங்கிய திலக் வர்மா

ராம்சரணிடம் கிரிக்கெட் பேட்டில் ஆட்டோகிராப் வாங்கிய திலக் வர்மா

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வீரர்கள் பட்டியலில் ஐதராபாத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் இடம் பெற்றிருந்தார். சிறப்பாகவும் விளையாடி இருந்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் பெத்தி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திலக் வர்மாவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார் ராம்சரண். மேலும் திலக் வர்மாவின் விருப்பததை ஏற்று அதில் தனது ஆட்டோகிராபையும் போட்டுத் தந்துள்ளார்.

திலக் வர்மா வெறுமனே ராம்சரணை பார்த்துவிட்டு போவதற்காக மட்டும் பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தரவில்லை. இந்த படத்தில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் இருக்கின்றன. அதில் திலக் வர்மாவும் இடம்பெற்றுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அப்போது படமாக்கப்பட்டன. அதன் பின்னர்தான் அவர் ராம்சரணிடம் கிரிக்கெட் பேட்டில் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டுள்ளார் திலக் வர்மா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !