உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆபாச பாடல் நீக்கம் : ‛கேடி தி டெவில்' பட இயக்குனர் மீது பாலிவுட் நடிகை காட்டம்

ஆபாச பாடல் நீக்கம் : ‛கேடி தி டெவில்' பட இயக்குனர் மீது பாலிவுட் நடிகை காட்டம்

கன்னடத்தில் நடிகர் துருவ சார்ஜா நடிப்பில் இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேடி : தி டெவில். பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இதில் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கும் பாலிவுட் நடிகை நோரா பதேகிக்கும் ஒரு பாடல் காட்சி இருக்கிறது. கன்னடத்தில் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சியின் ஹிந்தி வெர்ஷனில் ஆபாச வரிகள் அதிகம் இடம் பெற்றிருந்ததால் மகளிர் உரிமை ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகளின் கண்டனம் காரணமாக தற்போது மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தலின்படி எல்லா தளங்களிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் பாடலில் நடித்துள்ள நோரா பதேகி, ஹிந்தியில் இந்த பாடல் ஆபாச வரிகள் காரணமாக நீக்கப்பட்டுள்ளதால் இயக்குனர் பிரேம் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “இந்த படத்தில் சஞ்சய் தத் நடித்திருக்கிறார் என்கிற காரணத்திற்காகத்தான் நானும் இதில் ஒரு பாடலில் நடனமாட ஒப்புக்கொண்டேன். படத்தின் இயக்குனர் கன்னடத்தில் இந்த பாடலின் வரிகளை பற்றி சொல்லும்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஹிந்தியில் இந்தப் பாடலின் வெளியீட்டு விழாவில் தான் வரிகள் மோசமாக இருப்பதை கவனித்தேன். ஹிந்தியில் இந்தப் பாடல் வரிகளை கேட்டதுமே அவரிடம் நிச்சயமாக இந்த பாடல் மூலமாக நமக்கு பின்னடைவு தான் ஏற்படும் என்று கூறினேன்.

மேலும் என்னுடைய இமேஜை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் இருந்தும் தூரமாகவே ஒதுங்கி நின்று கொண்டேன். தற்போது பலரது கண்டனத்திற்கு ஆளாகி இந்த பாடல் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை வெளியிடுவது குறித்து என்னிடம் அனுமதி எதுவும் கேட்கவில்லை. அது மட்டுமல்லாமல் தேவையில்லாமல் என்னுடைய மற்றும் சஞ்சய் தத் இருவரின் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும் லிரிக்கல் வீடியோவுக்காக பயன்படுத்தி இருப்பதால் அது என்னுடைய தொழில் மதிப்பை குறைக்கும் விதமாக இருக்கிறது” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !