உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 ஷோலேவுக்கு சமம் : துரந்தர் 2 படம் பார்த்த ராம்கோபால் வர்மா சிலாகிப்பு

100 ஷோலேவுக்கு சமம் : துரந்தர் 2 படம் பார்த்த ராம்கோபால் வர்மா சிலாகிப்பு

பாலிவுட்டில் கடந்த டிசம்பர் மாதம் துரந்தர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கியிருந்த இப்படம் 1400 கோடி வசூலித்தது. இதன் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று இந்த படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர் 2 வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பிரீமியர் காட்சி சினிமா பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் துரந்தர் படம் பார்த்தத ராம்கோபால் வர்மா பிரமித்து போய் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “துரந்தர் 2 திரைப்படம் ஷோலே திரைப்படத்தை விட 100 மடங்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. முகல் இ ஆசம் படம் தொடங்கி இப்போது வந்த மிகச்சிறந்த படங்கள் அனைத்தையும் இது மிஞ்சும். இனி அந்த படங்களை எல்லாம் துரந்தர் 2 குழுவுடன் ஒப்பிடும் போது தொலைக்காட்சி தொடர்களைப் போல இருக்கும். சொல்லப்போனால் இது நியூ சினிமாட்டிக் வரிசையில் புதிய பிறப்பு என்றும் இதற்கு முன் இருந்த அனைத்தின் இரக்கமற்ற அழிவும் என்றும் கூட சொல்லலாம்.

இயக்குனர் என்ற வார்த்தையில் உச்சரிப்பே இனி ஆதித்யா தர் என்கிற பெயரில் இருந்து தான் தொடங்க போகிறது. ஹாலிவுட் இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் கூட தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு துரந்தர் 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பது தான் விவேகமானதாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !