உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதாநாயகனாக நுழைந்த தேவிஸ்ரீ பிரசாத் : வெளியேறிய கீர்த்தி சுரேஷ்?

கதாநாயகனாக நுழைந்த தேவிஸ்ரீ பிரசாத் : வெளியேறிய கீர்த்தி சுரேஷ்?

தெலுங்கில் ‛எல்லம்மா' என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்கிற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இயக்குனர் வேணு ஏல்தந்தி டைரக்ஷனில் உருவாகும் இந்த படத்தில் நானி அல்லது நிதின் இருவரில் யாரோ ஒருவர் நாயகனாக நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு பதிலாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

அதேசமயம் இந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியேறியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகியை தற்போது படக்குழுவினர் தேடி வருகிறார்கள். இத்தனைக்கும் கீர்த்தி சுரேஷுக்கு இந்த கதையும் கதாபாத்திரமும் பிடித்து தான் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் கதாநாயகன் மாற்றம் நிகழ்ந்து தற்போது தேவிஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிப்பதால் அது தனக்கு செட் ஆகாது என்று தான் இந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !