உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிஷப் ஷெட்டியின் சத்ரபதி சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்கும் துரந்தர் நடிகர்

ரிஷப் ஷெட்டியின் சத்ரபதி சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்கும் துரந்தர் நடிகர்

காந்தாரா படத்தின் இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ரிஷப் ஷெட்டி நடிக்கும் படம் 'தி பிரைட் பாரத் சத்ரபதி சிவாஜி மகாராஜ்.'. பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குவதன் மூலம் தயாரிப்பாளர் சந்தீப் சிங் இயக்குனராக அடி எடுத்து வைக்கிறார். பான் இந்தியா படம் என்பதால் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டில் இருந்தும் இந்த படத்திற்கு நட்சத்திரங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் துரந்தர் படத்தில் மேஜர் இக்பால் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ப்ரீத்தம் இசையமைக்கிறார். வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !