ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் படம் 1300 கோடி வசூலித்தது. அதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்து இரண்டு நாட்களில் உலக அளவில் 500 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கும் முதல் பாகத்தை போலவே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த துரந்தர்-2 படம் குறித்து இயக்குனர் ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்த படத்தின் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் புனைவுடன் இவ்வளவு சிறப்பாக கலந்திருப்பதை பார்ப்பது பிரமிக்க வைக்கும் அனுபவமாக உள்ளது. நடிகர்களின் வழக்கத்திற்கு மாறான நடிப்பும் அற்புதமான திரைக்கதையும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக அனைவரின் நடிப்பும் பொருத்தமான முகபாவணைகளும் நுணுக்கமாக இருந்தது. நடிகர் தேர்வு படத்தை இன்னும் எதார்த்தமாக உணர வைத்தது. அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப குழுவினரும் தங்களை மிஞ்சி உள்ளார்கள். இது நிச்சயமாக இந்திய சினிமாவில் ஒரு வரலாற்று தருணம். படம் முழுக்க நான் மூழ்கி போயிருந்தேன். படத்தின் நீளத்தை என்னால் உணரவே முடியவில்லை என்று தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.