உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ட்ரோல்களால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறார் ஸ்ரீலீலா

ட்ரோல்களால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறார் ஸ்ரீலீலா

பராசக்தி படத்தை அடுத்து பவன் கல்யாண் உடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள படம் உஸ்தாத் பகத்சிங். இப்படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தன்னைப்பற்றி வெளியாகும் ட்ரோல்கள் பற்றி ஸ்ரீ லீலா அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் நடிக்கும் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போதும் சோசியல் மீடியாவில் பல தரப்பட்ட எதிர்மறையான கருத்துக்களை பரப்புகிறார்கள். ஆரம்பத்தில் அதை நினைத்து மிகப் பெரிய அளவில் வருத்தப்பட்டேன். ட்ரோல்களால் மிகவும் காயமடைந்து பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். ஆனால் தற்போது பாராட்டு மற்றும் விமர்சனங்கள் இரண்டையும் சமாளிக்க கற்றுக் கொண்டுள்ளேன். எந்த கருத்து முக்கியமானதோ அதை ஏற்றுக்கொண்டு எதை புறக்கணிக்க வேண்டுமோ அதை தவிர்த்து வருகிறேன். அந்த அளவுக்கு தற்போது பக்குவம் அடைந்து விட்டேன் என்று கூறும் ஸ்ரீலீலா, தற்போது எனது வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறேன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிப்படங்களில் நடிப்பதால் ரொம்ப பிசியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !