உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் நடிக்கும் அனுஷ்கா சர்மா

அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் நடிக்கும் அனுஷ்கா சர்மா

ஜவான் படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தனது ஆறாவது படத்தை தற்போது இயக்கி வருகிறார் அட்லி. சயின்ஸ் பிக்சன் கதையில் உருவாகி வரும் இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதோடு, ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் ஒரு நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக 2018ம் ஆண்டில் ஜீரோ என்ற படத்தில் நடித்த அனுஷ்கா சர்மா, திருமணத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !