யாரும் செய்யாத சாதனை புரிந்த 'தாய் கிழவி'
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த மாதம் பிப்ரவரி 27ம் தேதி வெளியான படம் 'தாய் கிழவி'.
இப்படம் 75 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு சீனியர் நடிகை நடித்து இதற்கு முன்பு எந்த ஒரு படமும் இவ்வளவு தொகை வசூலித்தது இல்லை. அதிலும் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் ஒரு 'கிழவி' கதாபாத்திரம் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
இளம் நடிகைகள் கிளாமராக நடித்து கூட செய்ய முடியாத ஒரு சாதனையை சீனியர் நடிகையான ராதிகா செய்திருப்பதும் சாதனைதான். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் கூட இப்படி ஒன்று இதற்கு முன்பு நடக்கவில்லை. ஒரு படத்திற்கு கதையும், கதாபாத்திரங்களும் தான் முக்கியம் என்பதை இந்தப் படத்தின் வெற்றி பலருக்கும் புரிய வைத்திருக்கிறது.