வாசகர்கள் கருத்துகள் (1)
யோவ் நம்புய்யா.
மலையாளத்தில் இயக்குனர் ஜித்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தற்போது திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது. முதல் பாகத்திலேயே கதாநாயகி மீனாவை விட அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கீதா பிரபாகர் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்த ஆஷா சரத் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார். கடந்த இரண்டு பாகங்களிலும் பங்களிப்பு செய்த அவர் இந்த மூன்றாம் பாகத்திலும் நடித்திருக்கிறார்.
ரசிகர்களைப் போலவே இந்த மூன்றாம் பாகத்தை காண தானும் ஆவலாக இருப்பதாக கூறும் ஆஷா சரத் கடந்த சில வருடங்களாகவே தனது கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். காரணம் அங்கே அவர் ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். அவரது மகள்கள் வெளிநாட்டில் படித்து வந்த நிலையில் அவர் மட்டும் அவ்வப்போது படப்பிடிப்புக்காகவும் மற்றும் விழாக்களில் கலந்து கொள்வதற்காகவும் துபாயில் இருந்து கேரளா வந்து சென்றார். சமீபத்தில் ஜெயராம் உடன் அவர் இணைந்து நடித்த ஆசைகள் ஆயிரம் படம் வெளியானது. இந்த படம் ஓரளவு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் திரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார் ஆஷா சரத்.
யோவ் நம்புய்யா.