உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 2வது படத்திலேயே கமலுடன் நடித்த நிரோஷா

பிளாஷ்பேக்: 2வது படத்திலேயே கமலுடன் நடித்த நிரோஷா

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள், நடிகை ராதிகாவின் தங்கை நிரோஷா. இவர் 'அக்னி நட்சத்திரம்' படத்தின் மூலம் மணிரத்னத்தால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பிறகு இவர் ராம்கி, கார்த்திக், பிரபு, அர்ஜுன், முரளி மாதிரியான 2வது வரிசை ஹீரோக்களுடன்தான் அதிகமாக நடித்தார். ஆனால் அவர் நடித்த இரண்டாவது படமே கமலுடன் தான். அந்த படம் 'சூரசம்ஹாரம்'. இதில் அவர் கமலுடன் மிக நெருக்கமாக நடித்திருந்தார். இதற்கு முன்பும், பின்பும் அவர் அவ்வாறு நடித்ததில்லை.

இந்த படத்தை சித்ரா லட்சுமணன் இயக்கி இருந்தார். வியட்நாம் வீடு சுந்தரம் கதை எழுதியிருந்தார். கிட்டி, நிழல்கள் ரவி, பல்லவி, மாதுரி, ஜனகராஜ், பாக்யலட்சுமி, உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் தமிழகத்தில் 100 நாட்கள் ஓடியது. ஆனால் இதன் தெலுங்கு டப்பிங் 'போலீஸ் ஸ்டோரி' 185 நாட்கள் ஒடியது. தெலுங்கு டப்பிங்கில் கூடுதலாக ஒரு பாடல் சேர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !