வாசகர்கள் கருத்துகள் (1)
தேர்தலில் நிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தினீங்களே ஒரு மன்னிப்பு கூட கேக்கலையே சுயநலவாதி சார் நீங்க
ஓமை கடவுளே, டிராகன் படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. ரஜினிக்கு இவர் கதை சொன்ன அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், கூலி படத்திற்குப் பிறகு, என்னிடம் ஒரு கதை இருப்பதாகக் கேள்விப்பட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை ரஜினி பேசினார். உடனடியாக திங்கட்கிழமை சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். நான் நேரத்திற்கு முன்பே சென்றேன், ஆனால் அவர் எனக்காக ஏற்கனவே அங்கே காத்திருந்தார்.
இளம் இயக்குநர்களிடமும் அவர் காட்டும் மரியாதையைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். அப்போது ஒரு பெரிய அரசியல் தலைவர் அவரைச் சந்திக்க வந்திருப்பதாக என்னிடம் கூறியவர், அவரை சந்திக்க என்னிடம் அனுமதி கேட்டார். அதற்காக என்னிடம் மன்னிப்பும் கேட்டார்.
நான் வெளியில் காத்திருந்தபோது, 10 நிமிடங்களிலேயே அவருடைய மானேஜர் வந்து, உங்களை காக்க வைத்ததற்காக ரஜினி சார் மன்னிப்பு கேட்க சொன்னார், அவர் மிகவும் வருத்தப்படுகிறார் என்று கூறினார். அவருக்காக நான் 3 நாட்கள் கூட காத்திருப்பேன். கதை சொல்லும்போதும் அவர் மீண்டும் மன்னிப்பு கேட்டார். நான் சொன்ன விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை சொல்லி முடித்து என்னை வெளியில் வந்து வழி அனுப்பும் போதும், அவர் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார். நிச்சயமாக இது ரஜினியின் எளிமையையும், சக மனிதர்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பையும் அழகாகப் பிரதிபலிக்கிறது'' என்று கூறியுள்ளார்.
ஆனால். அந்த கதை படமாக்கப்படவில்லை.
தேர்தலில் நிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தினீங்களே ஒரு மன்னிப்பு கூட கேக்கலையே சுயநலவாதி சார் நீங்க