ரியோ - சானியா அய்யப்பன் இணையும் 'மேடி'
சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' என்ற படத்தில் ஹீரோவானவர் ரியோ ராஜ். அதன்பிறகு 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண்பாவம் பொல்லாதது' போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். தற்போது 'ராம் இன் லீலா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார் ரியோ ராஜ்.
இந்த நிலையில் தான் நடிக்கும் 7வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'மேடி' என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை 'மீசைய முறுக்கு, நட்பே துணை, மாஸ்டர், வாரிசு, லியோ' படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திகேயன் என்பவர் இயக்கும் இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக சானியா அய்யப்பன் நடிக்கிறார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் சிங்கம் புலி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.