அப்பா சென்டிமென்ட்டில் தமிழ் சினிமா : போன வாரம் 'யூத்', இந்த வாரம் 'ஹாப்பி ராஜ்'
சினிமா சென்டிமென்ட்டில் முக்கியமான சென்டிமென்ட் அம்மா சென்டிமென்ட்தான். மற்ற சென்டிமென்ட் எல்லாம் அதற்குப் பிறகுதான். ஆனால், தமிழ் சினிமாவில் தற்போது அப்பா சென்டிமென்ட் கொஞ்சம் எட்டிப் பார்த்துள்ளது.
போன வாரம் வெளியான 'யூத்' படத்தில் அப்படி சென்டிமென்ட் அழுத்தமாக இருந்ததால் அந்தப் படம் குடும்பத்து ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால், படம் 25 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வாரம் வெளியாக உள்ள 'ஹாப்பி ராஜ்' படத்திலும் அப்பா சென்டிமென்ட் தான் முக்கியமாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் அப்பாவாக ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், சில காட்சிகள் மட்டுமே வந்து போவார் ஜார்ஜ் மரியான். ஆனால், 'ஹாப்பி ராஜ்' படத்தில் முழு படத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துவிட்டால் அடுத்து நிறைய அப்பா சென்டிமென்ட் படங்கள் வர ஆரம்பித்துவிடும்.