வாசகர்கள் கருத்துகள் (2)
எங்கே போனது மகளிர் அமைப்பு ?????????????????????
டேய் டேய் ஆக்ட் கொடுக்காதடா?? நீ யாருன்னு ஊருக்கே தெரியும் . சின்ன புள்ளைகிட்ட நடக்குற விதமா இது?? நாட்டாமை செந்தில் மாதிரி பேசாதடா??
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து புகழ்பெற்றார். தற்போது அவர் நடித்த முதல் ஹிந்திப் படமான 'துரந்தர்' பெரும் வெற்றி பெற்று அவரை பாலிவுட்டில் முதல் வரிசைக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது சாராவின் சம்பளம் ஒரு படத்திற்கு 4 கோடி என்கிறார்கள்.
'துரந்தர்' படத்தில் சாராவின் தந்தையாகவும், பாகிஸ்தான் அமைச்சராகவும் நடித்தவர் ராகேஷ்பேடி. பாலிவுட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படங்களில் குணசித்ரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறவர். துரந்தர் படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்ட ராகேஷ் பேடி சாரா அர்ஜூனை கட்டிப்பிடித்து தோளில் முத்தமிட்டது சர்ச்சை ஆனது. '71 வயதான ராகேஷ் பேடி பேத்தி வயதுள்ள நடிகையிடம் இப்படி நடந்து கொள்ளலாமா' என்று இணைய தளங்களில் கேலி கிண்டல் செய்தனர். அதற்கு அப்போதே விளக்கம் அளித்தார். தற்போது மீண்டும் அந்த விஷயம் குறித்து பேசி உள்ளார்.
இதுகுறித்து ராகேஷ் பேடி அளித்த ஒரு பேட்டியில் வேதனையுடன் கூறியிருப்பதாவது: 'துரந்தர்' படத்தில் என் மகளாக சாரா நடித்திருந்தார். படப்பிடிப்பின்போது நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், ஒரு மகள் ஒரு தந்தையை அன்பாக அணைத்துக் கொள்வது போல அவள் என்னை வரவேற்பாள். எங்களுக்குள் நல்ல தந்தை -மகள் பிணைப்பு இருக்கிறது. அன்று மேடையில் நான் அதே பாசத்தைக் காட்டினேன். ஆனால் மக்கள் அதில் அன்பைக் காணவில்லை. தவறாக பார்க்கும் கண்களை நாம் என்ன செய்ய முடியும்?” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
எங்கே போனது மகளிர் அமைப்பு ?????????????????????
டேய் டேய் ஆக்ட் கொடுக்காதடா?? நீ யாருன்னு ஊருக்கே தெரியும் . சின்ன புள்ளைகிட்ட நடக்குற விதமா இது?? நாட்டாமை செந்தில் மாதிரி பேசாதடா??