ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள்
ADDED : 3 days ago
தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாவதும், தெலுங்குப் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியாவதும் அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஆனால் ஒரே நாளில் இரண்டு தமிழ்ப் படங்கள், அதுவும் இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள், டப்பிங் ஆகி வெளியாவது ஆச்சரியம்தான்.
கென் கருணாஸ் இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் படம் 'யூத்'. ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்க, நாளை தமிழில் வெளியாக உள்ள படம் 'ஹாப்பி ராஜ்'. இந்த இரண்டு படங்களும் அதே பெயரில் டப்பிங் ஆகி நாளை தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
'யூத்' படம் தமிழில் வரவேற்பைப் பெற்றுள்ளதால் தெலுங்கில் அந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 'ஹாப்பி ராஜ்' படம் ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாவதால் அதன் வரவேற்பு எப்படி என்பது நாளைதான் தெரியும்.