உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம்

‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தமிழில் ‛குட் பேட் அக்லி, டியூட்' ஆகிய படங்களை தயாரித்துள்ளது. இதையடுத்து சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, பிரதீப் ரங்கநாதன், மணிகண்டன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து தமிழில் படங்களை தயாரிக்கவுள்ளனர்.

இந்த வரிசையில் தமிழில் இந்தியன் 2, கூலி, இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிஷிகாந்த். இவரை கதாநாயகனாக வைத்து மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ‛சிறை, யூத்' என தொடர் வெற்றி படங்களில் நடித்த மலையாள நடிகை அனிஷ்மா அனில் குமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !