உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே

ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே

டெஸ்டின் டேனியர் க்ரெட்டோன் இயக்கத்தில், டாம் ஹாலந்த், ஜென்டயா, சாடி சின்க் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே' படத்தின் டிரைலர் மார்ச் 18ம் தேதி வெளியானது. அந்த டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 718 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய உலக சாதனையைப் படைத்தது.

தற்போது ஒரு பில்லியன், அதாவது 1000 மில்லியன் பார்வைகளைக் கடந்து மற்றுமொரு உலக சாதனையைப் படைத்துள்ளது. யு டியுப், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் சேர்ந்தது. உலக அளவில் எந்த ஒரு திரைப்படமும் இவ்வளவு பார்வைகளைக் கடந்தது இல்லை.

உலக அளவில் இதற்கு முன்பு அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலர் ஆக 2024ல் வெளிவந்த 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' கேம் டிரைலர் இருந்தது. அது 475 மில்லியன் பார்வைகளைப் பெற்று இதுவரையில் முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை 24 மணி நேரத்திலேயே 'ஸ்பைடர் மேன்' டிரைலர் முறியடித்துவிட்டது.

24 மணி நேர சாதனையைப் பொறுத்தவரையில் 2024ல் வெளிவந்த 'டெட்பூல் & உல்வரின்' டிரைலர் 365 மில்லியன் சாதனையைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை 8 மணி நேரத்திலேயே 'ஸ்பைடர்' மேன் முறியடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !