உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஒரே படத்தின் லாபத்தில் ஸ்டூடியோ கட்டிய தயாரிப்பாளர்

பிளாஷ்பேக் : ஒரே படத்தின் லாபத்தில் ஸ்டூடியோ கட்டிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவின் தொடக்க காலங்களில் முன்னணி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்தர் ஏ.கே.வேலன். எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர் என பல முகங்களை கொண்டவர். இயற்பெயர் அ.குழந்தைசாமி என்பதாகும். ஆசிரியராக பணியாற்றிய இவர் பின்னர் திராவிட இயக்கத்தில் சேர்ந்து அரசியலுக்கு வந்தார்.

பின்னர் சினிமாவிற்கு வந்த இவர் இயக்கிய முதல் 'பெரிய கோவில்'. இந்த படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய படம் 'தை பிறந்தால் வழி பிறக்கும்'. இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், ராஜசுலோச்சனா, பிரேம் நசீர், உள்ளிட்ட பலர் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார், படம் பெரிய வெற்றி பெற்று பெரிய லாபத்தை கொடுத்தது.

படத்தின் தெலுங்கு, கன்னட, ஹிந்தி ரீமேக் உரிமம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டது. பின்னர் அடுத்த வருடமே படத்தை மறு வெளியீடு செய்தார். இப்படி இந்த படத்தின் மூலம் அந்தக் காலத்திலேயே ஒரு கோடி வரை சம்பாதித்ததாக கூறுவார்கள். இந்த பணத்தை கொண்டு அவர் அருணாச்சலம் ஸ்டூடியோவை தொடங்கி, ஸ்டூடியோ அதிபராகவும் மாறினார்.

அதன் பிறகு அவர் ஸ்டூடியோவில் கவனம் செலுத்தினாலும் காவேரியின் கணவன், பொன்னி திருநாள், கைதியின் காதல், மக்களசுற்றம் படங்களை இயக்கினார். ஆனால் எந்த படமும் 'தை பிறந்தாள் வழி பிறக்கும்' அளவிற்கு வெற்றி பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !