உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி

பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி

தமிழ் சினிமாவில் எந்தப் பாடல் ஹிட் என்பது ரேடியோவில் கேட்பதில் ஆரம்பித்து, டிவி பக்கம் சென்று, அப்படியே எப்எம் ரேடியோ பக்கம் திரும்பி, யூ டியூபில் நிலை கொண்டுள்ளது. வீடியோவாகப் பார்க்க வேண்டும் என்றால் யூ டியூப் பக்கம் தானே வந்தாக வேண்டும். அதனால், அதற்குக் கிடைக்கும் பார்வைகள்தான் இப்போது ஒரு பாடலின் ஹிட்டைத் தீர்மானிக்கிறது.

இப்போதைக்கு இரண்டு 'யூத்தான' பாடல்கள்தான் கடும் போட்டியில் உள்ளன. ஒரு பாடல் 'யூத்' படத்தில் இடம் பெற்ற 'முட்டை கலக்கி', மற்றொரு பாடல் 'பவழ மல்லி' வீடியோ பாடல்.

யூத் படப் பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார். 'பவழ மல்லி' பாடலுக்கு சாய் அபயங்கர் இசையமைத்து நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பாட, விவேக் எழுதியுள்ளார். பாடலுக்கு சாய் அபயங்கர், கயடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். இரண்டு பாடல்களின் 'மேக்கர்கள், நடிகர்கள்' யூத்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

'யூத்' படத்தின் 'முட்டை கலக்கி' பாடல் 64 மில்லியன் பார்வைகளைக் கடந்து 'குளோபல் டாப் மியூசிக் வீடியோ'வில் 4வது இடத்தில் உள்ளது. 'பவழ மல்லி' பாடல் 63 மில்லியன் பார்வைகளைக் கடந்து 'குளோபல் டாப் மியூசிக் வீடியோ'வில் 11வது இடத்திலும் உள்ளன. இரண்டில் எந்தப் பாடல் முதலில் 100 மில்லியனைக் கடக்கிறதோ அதுதான் வின்னர் என்று வைத்துக் கொள்வோமா ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !