எஸ்பிபி சிலை திறப்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ்
ADDED : 8 hours ago
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த 2020ல் கொரோனா முதல் அலை சமயத்தில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில், சமம் என்கிற அமைப்பின் சார்பாக அவருக்கு உருவச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
அதனுடன் சமம் சங்கீத மேகம் என்கிற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தும் பாடகர் விஜய் யேசுதாஸ் சமம் அமைப்பின் சார்பாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றதுடன் எஸ்பிபியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.