தொடர்ந்து தெலுங்கில் சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 116 days ago
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சமீபகாலமாக பிறமொழிகளில் குறிப்பாக தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் தெலுங்கில் வெங்கடேஷ் உடன் இவர் இணைந்து நடித்த 'சங்கராந்திகி வஸ்துனாம்' படத்தில் நடித்திருந்தார். இந்தபடம் வெற்றி பெற்றது.
இப்போது தெலுங்கில் ரா.கார்த்திக் இயக்கத்தில் நாகர்ஜூனாவின் 100வது படம் உருவாகிறது. இதை அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். குடும்ப கதைக்களத்தை மையப்படுத்தி உருவாகும் இதில் மூன்று கதாநாயகிகள் இடம் பெறுகின்றனர். தபு மற்றும் சுஷ்மிதா பட் ஆகியோர் ஏற்கனவே இணைந்ததாக தகவல் வெளியானது. இப்போது இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.