ராவடி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
ADDED : 115 days ago
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில், அவரது மகன் எல்.கே.அக்ஷய் குமார், 'சிறை' என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே அக்ஷய் நாயகனாக வைத்து 'ராவடி' என்ற படத்தையும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் லலித் தயாரிக்கிறார். இதை அறிமுக இயக்குனர் விக்னேஷ் வடிவேலு என்பவர் இயக்கியுள்ளார். இதில் அக்ஷய் குமார் உடன் மலையாள நடிகர் பசில் ஜோசப் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா சர்மா நடிக்கின்றார். ஜென் மார்டின் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது என நேற்று இரவு படக்குழு அறிவித்துள்ளனர். இப்படம் இவ்வருட சம்மருக்கு திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.