ராமாயணா டிரைலர் ரிலீஸ் தள்ளி வைப்பு
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ராமாயணா. இதிகாச காவிய படமான இதன் டிரைலர் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டிரைலர் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளனர். இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில்....
‛‛நமது ராமாயணத்திற்கு சிறந்த தருணம். சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இருப்பது மூலம் இந்த படத்தை உலகளவில் எடுத்து செல்ல வேண்டும் என்ற கனவு நனவாகி உள்ளது. எங்களின் டிரைலரை பின்னர் ஒரு தேதியில் உலகளவில் வெளியிடுவோம். 100 ஆண்டு இந்திய சினிமா வரலாற்றில் உலகளாவிய ஹாலிவுட் படம் போன்று ராமாயணம் உலகம் முழுவதும் காட்டப்படும் பெருமைக்குரிய தருணமாக அமையும். நமது கலாச்சாரம் மற்றும் கதைகளின் செழுமையை ஒரு புது பெருமையுடனும் உற்சாகத்துடனும் கண்டறிய ஒரு கதவு திறக்கிறது. இது நடப்பதற்கு உதவிய ராமாயணத்தின் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமாயணா படம் 2026 தீபாவளி பண்டிகையின்போது ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் வெளியாக உள்ளது.