ஏப்ரல் 3ல் படங்கள் 6 படங்கள் ரிலீஸ்
2026ம் ஆண்டின் மூன்றாவது மாதம் இன்றுடன் முடிகிறது. கடந்த மூன்று மாதங்களில் தியேட்டர்களில் வெளியான நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 66. ஓடிடி தளங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 4. ஆக மொத்தம் இதுவரையில் 70 படங்கள் வெளிவந்துள்ளன.
இந்த வார வெள்ளிக்கிழமையான ஏப்ரல் 3ம் தேதி, “கார்மேனி செல்வம், கெஸ்ட், காளிதாஸ் 2, லீடர், மரகத மலை, நீளிரா” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்துவிட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஒரு தேர்வு மட்டுமே உள்ளது. அதன்பின் இதர வகுப்புகளுக்கான தேர்வுகள் ஆரம்பமாக உள்ளது.
ஐபிஎல் போட்டிகள் சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமாகிவிட்டது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முதல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியிலும் வாராவாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய அப்படியே தொடர்கிறது.
வரும் வாரங்களிலும் அடுத்தடுத்து சில புதிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.