திரிஷ்யம் பாணியில் காமெடியாக உருவாகி இருக்கும் மோகினியாட்டம்
மலையாளத்தில் படம் பார்க்கும் ரசிகர்களை அடுத்து என்ன நடக்குமோ என இருக்கை நுனியில் அமர வைத்த படம் திரிஷ்யம். அப்படி ஒரு த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்த திரிஷ்யம் படத்தின் பாணியில் அதேசமயம் அதற்கு நேர்மாறாக முழுக்க முழுக்க காமெடி கலந்து உருவாகி இருக்கும் படம் மோகினியாட்டம். கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான பரதநாட்டியம் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த மோகினி ஆட்டம் உருவாகி உள்ளது. நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒரு கொலையை செய்துவிட்டு அதை மறைப்பதற்காக கதாநாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து திண்டாடுவதை நகைச்சுவையாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள் என்பது படத்தின் டீசரை பார்க்கும்போதே தெரிகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணதாஸ் முரளி தான், இந்த படத்தையும் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 10-ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.