உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பள்ளிச்சட்டம்பி' என் இதயத்திற்கு நெருக்கமான படம் : கயாடு லோஹர்

‛பள்ளிச்சட்டம்பி' என் இதயத்திற்கு நெருக்கமான படம் : கயாடு லோஹர்

டொவினோ தாமஸ் ஜோடியாக பள்ளிச்சட்டம்பி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் கயாடு லோஹர். இந்த பட நிகழ்ச்சிக்காக சென்னை வந்த கயாடு பேசுகையில், ''இது எனது மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரம், படமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி.

நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து பேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,'' என்றார்.

மற்ற ஊர்களில் மகிழ்ச்சியாக இருந்தவர், மேடையில் டான்ஸ் ஆடியவர் சென்னையில் ஏனோ அப்படி இல்லை, டல்லாக காணப்பட்டார் கயாடு. அவர் பேச்சிலும் அதிக உற்சாகம் இல்லை. தமிழ் கொஞ்சம் தெரியும். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். அது கிடைத்தால் தமிழில் படம் பண்ணுவேன் என குறைவாகவே பேசினார். அவருக்கு உடல்நிலை பிரச்னை இருந்து இருக்கலாம். அதனால் அவர் டல்லாக இருந்தார் என்று ஒரு தரப்பு சொன்னது.

கடந்த ஆண்டு டிராகன் படத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கயாடு பின்னர் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவர் பற்றி பல்வேறு சர்ச்சை தகவல் வந்ததால் சில விளம்பர நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !