உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லெஜண்ட்ரி நடிகர்களை உருவாக்கிய இடத்தில் நான் : பாயல் ராஜ்புட் பெருமிதம்

லெஜண்ட்ரி நடிகர்களை உருவாக்கிய இடத்தில் நான் : பாயல் ராஜ்புட் பெருமிதம்

தமிழில் ‛இருவர் உள்ளம்' படத்தில் நடித்தவர் பாயல் ராஜ்புட். தெலுங்கில் தான் அதிகம் நடிக்கிறார். தற்போது ‛லெஜண்ட்' சரவணன் நடித்துள்ள ‛லீடர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆர்எஸ் துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்தவாரம் ஏப்., 3ல் படம் ரிலீஸாகிறது.

பாயல் ராஜ்புட் கூறுகையில், ‛‛சென்னைக்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி. இங்குள்ள மக்களின் அன்பு, உணவுகள்... குறிப்பாக இட்லி, தோசை, சாம்பார், வத்தக்குழம்பு எனக்கு மிகவும் பிடிக்கும். சினிமா மீது இங்குள்ள மக்கள் வைத்துள்ள பாசமும் பிரமிக்க வைக்கிறது. இது சாதாரண மேடை அல்ல, புனிதமான இடமாக கருதுகிறேன். ரஜினி, கமல், ஸ்ரீதேவி என பல சாதனைகளை புரிந்த லெஜண்ட்ரி நடிகர்களை உருவாக்கிய இடம் இது. இப்படி ஒரு இடத்தில் நானும் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !