உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு யுஏ சான்றிதழ்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு யுஏ சான்றிதழ்

டியூட் படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருடன் கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, சீமான், கவுரி கிஷன், மாளவிகா உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். டிஜிட்டல் யுக காதல் கதையில் உருவாகியுள்ள இப்படத்தை நயன்தாரா, எஸ்.எஸ்.லலித்குமார் மற்றும் எல்.கே. விஷ்ணுகுமார் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து மாற்றப்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் இன்று இந்த படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. அதில் இந்த படம் 156 நிமிடங்கள், அதாவது 2 மணிநேரம் 36 நிமிடம் ஓடக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !