சூரி படத்தில் நடிக்க மமிதாவிடம் பேச்சுவார்த்தை...?
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த டியூட் படம் சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து தற்போது விஜயின் ஜனநாயகன், சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், தனுஷின் கர போன்ற படங்களில் நடித்து வருகிறார் மமிதா பைஜூ. அதோடு தனது தாய்மொழியாக மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் மண்டாடி படத்தை அடுத்து அயலான் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் ஏழாவது படத்திலும் மமிதா பைஜூ நாயகியாக நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படம் கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இது குறித்த ஒரு போஸ்டர் கூட சமீபத்தில் வெளியிட்டிருந்தார்கள். இந்த படத்தை ஏற்கனவே பிரதீப், மமிதா நடித்த டியூட் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிப்பதால் அந்த படக்குழு மமிதாவிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
படத்தில் இவர் சூரிக்கு ஜோடியா அல்லது முக்கியத்துவம் வாய்ந்த வேடமா என்பது விரைவில் தெரியவரும்.