உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கத்தனார் பட டிரைலர் வெளியானது

கத்தனார் பட டிரைலர் வெளியானது

மலையாளத்தில் அனுஷ்கா அறிமுகமாகும் முதல் படம் கத்தனார் தி வைல்ட் சோர்சரர். இந்த படத்தில் ஜெயசூர்யா நாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் வினித், சாண்டி, தேவிகா, ஹரிஷ் உத்தமன், ஸ்ரீகாந்த், முரளி நிதிஷ், பரத்வாஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராகுல் சுப்ரமணியன் இசையமைத்திருக்கிறார். கத்தனார் படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாக உள்ளது. ஒரு மந்திரவாதியின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. அதில், பிரமிக்க வைக்கும் அதிரடியான மர்ம காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பேன்டஸி கதையில் உருவாகி உள்ள இப்படத்தை ரோஜின் தாமஸ் இயக்கியுள்ளார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரித்திருக்கிறது. இதில் மோகன்லால், பிரபுதேவா ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !