உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த அளவுக்கு ஹிட் ஆகும் என நினைக்கவில்லை : கென் கருணாஸ்

இந்த அளவுக்கு ஹிட் ஆகும் என நினைக்கவில்லை : கென் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கி, நடித்த யூத் படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. அதில் கென் பேசுகையில் இந்த படத்தை நாங்கள் வித்தியாசமாக விளம்பரப்படுத்தினோம். மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஹீரோயின்கள் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அவர்களை விட நளினி நன்றாக பார்த்துக் கொண்டார். அம்மாவாக நடிக்க தேவதர்ஷினி செட் ஆவாரா? இளமையாக இருக்கிறாரே என யோசித்தேன். ஆனால் சேலை கட்டி வந்தவுடன் பக்காவாக செட் ஆனார்.

இந்த வெற்றிக்கு என் நண்பர்கள், என் டீம் காரணம். ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் படத்தை பிரபலப்படுத்தியது. இந்த அளவுக்கு படம் ஹிட் ஆகும் என நினைக்கவில்லை. இந்த படத்தால் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கணும் என நினைத்தோம். இப்போது படத்தில் நடித்த பலருக்கு பல பட வாய்ப்புகள் வருகிறது. நான் எங்கே போனாலும் கத்தி வரவேற்கிறார்கள். என்னை ஹீரோ ஆக்குங்க என தயாரிப்பாளரிடம் சொன்னேன். அதை அவர் செய்தார். எனக்கு இந்த வாய்ப்பு வாங்கி கொடுத்த, தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்திய அம்மா முத்து சூர்யாவுக்கு வாழ்நாள் முழுக்க நன்றியுடன் இருப்பேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !