உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கனவு நனவானது ; சூர்யாவை சந்தித்த மகிழ்ச்சியில் 'யூத்' பட நாயகி

கனவு நனவானது ; சூர்யாவை சந்தித்த மகிழ்ச்சியில் 'யூத்' பட நாயகி


கடந்த வாரம் கருணாஸின் மகன் கென் கருணாஸ் கதாநாயகனாக நடித்து அவரே இயக்கிய 'யூத்' திரைப்படம் வெளியானது. இந்த படம் 50 கோடி வசூலித்து வெற்றிப்படமாகவும் மாறி உள்ளது. இந்த படத்தில் 'சிறை' பட நடிகையான அனிஷ்மா, மலையாள நடிகை மீனாட்சி தினேஷ் மற்றும் பிரியன்ஷி யாதவ் என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். மூன்று பேருமே தங்களது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தனர். இந்த நிலையில் நடிகை மீனாட்சி தினேஷ் சமீபத்தில் நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளதுடன் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து மீனாட்சி தினேஷ் கூறும்போது, “என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து இப்போது வரை உன்னுடைய பேவரைட் நடிகர் யார் என்று கேட்டால் என்னுடைய பதில் எப்போதுமே சூர்யா சார் என்று தான் இருக்கும். நான் என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் பார்க்க விரும்பிய ஒரே நபர் அவர்தான். என்னுடைய கனவு இந்த அளவுக்கு நனவாகும் தருணம் வரும் என்று தான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் இன்று அது நிஜமாகி இருக்கிறது. பல வருடங்களாக அவர் மீது உள்ள ஈர்ப்பு, அவருடனான என்னுடைய ஞாபகங்கள்.. அதனாலயே ஏன் இதயம் நிறைந்து இருப்பது என் முகத்தில் வெளிப்படுகிறது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மீனாட்சி தினேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !