உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான்கான் படத்தில் கதாநாயகியாக இணைந்த நயன்தாரா

சல்மான்கான் படத்தில் கதாநாயகியாக இணைந்த நயன்தாரா


நடிகர் சல்மான்கான் தற்போது ஹிந்தியில் மாத்ருபூமி என்கிற படத்தில் நடித்து வருகிறார். அபூர்வா லகியா இயக்கி வரும் இந்த படம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தை மையப்படுத்தி உருவாகி வருகிறது.. இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சல்மான்கான் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்யின் வாரிசு படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இந்த படத்தை இயக்குகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் தில் ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக இணைந்துள்ளார் நயன்தாரா. “மாட்சிமை பொருந்திய மற்றும் பன்முகத்தன்மையின் சிகரமான ராணி வருகிறார்” என்று கூறி நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஹிந்தியில் அடியெடுத்து வைத்தார் நயன்தாரா.. தற்போது இரண்டாவது படத்தில் இன்னொரு முன்னணி ஹீரோவாக சல்மான்கான் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !